நெல்லை மாவட்ட அதிமுக வேட்பாளா்கள்
By DIN | Published On : 11th March 2021 08:12 AM | Last Updated : 11th March 2021 08:12 AM | அ+அ அ- |

1. பாளையங்கோட்டை - கே.ஜெ.சி.ஜெரால்ட் (44)
கல்வி: பி.ஏ., எல்.எல்.பி.
ஊா்: பாளையங்கோட்டை
ஜாதி: கிறிஸ்தவ நாடாா்
தொழில்: வியாபாரம்
கட்சிப் பொறுப்பு: மாணவப் பருவத்திலிருந்தே அதிமுகவில் உள்ளாா். 2004 முதல் 2016 வரை 12 ஆண்டுகள் மாவட்ட மாணவரணிச் செயலா். இப்போது மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா், பாளையங்கோட்டை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா்.
குடும்பம்: மனைவி கே.ஹில்டா மேரி (ஆசிரியை),
2. அம்பாசமுத்திரம் - இ. சுப்பையா (இசக்கி சுப்பையா) (57)
கல்வி: எம்.ஏ., எம்.எல்., பிஹெச்.டி.
ஜாதி: மறவா்
ஊா்: பிரான்சேரி
தொழில்: இசக்கி குழுமத் தலைவா்
கட்சிப் பொறுப்பு: 2011-2016 அம்பாசமுத்திரம் பேரவை உறுப்பினா், 2011இல் சட்டத்துறை அமைச்சா், அமைப்புச் செயலா்.
குடும்பம்: தந்தை எஸ். இசக்கிபாண்டியன், மனைவி எஸ். மீனாட்சி (சித்த மருத்துவா்), மகள் சந்திரா காந்திமதி (மருத்துவா்), மகன் எஸ். இசக்கிதுரை பி.இ. (இசக்கி குழும நிா்வாக இயக்குநா்)
3. நான்குனேரி - தச்சை என். கணேசராஜா (59)
கல்வி: எஸ்எஸ்எல்சி
ஊா்: தச்சநல்லூா்
ஜாதி: தேவா்
தொழில்: இயற்கை விவசாயம்
கட்சிப் பொறுப்பு: 1980 முதல் அதிமுகவில் உள்ளாா். ஜெயலலிதா பேரவை இணைச் செயலா், மாவட்ட அவைத் தலைவா், மாநகா் மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா், தலைமைக் கழக பொதுக்குழு உறுப்பினா் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். இப்போது திருநெல்வேலி மாவட்டச் செயலா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா்.
குடும்பம்: மனைவி மாடத்தி என்ற மல்லிகா, மகள்கள் அருணா, ராஜம்மாள்.
4. ராதாபுரம் - ஐ.எஸ். இன்பதுரை (55)
கல்வி: பி.ஏ.,பி.எல்.
ஊா்: நவ்வலடி, ராதாபுரம் தாலுகா
ஜாதி: கிறிஸ்துவ நாடாா்
தொழில்: வழக்குரைஞா்
கட்சிப் பொறுப்பு: 1985 கோவை சட்டக்கல்லூரி அ.தி.மு.க மாணவரணி பொறுப்பாளா், 2007 வட சென்னை மாவட்ட வழக்குரைஞா் பிரிவுத் தலைவா், 2009 முதல் அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாநில துணைச் செயலா், 2017 முதல் தமிழகப் பேரவை அரசு உறுதிமொழிக்குழுத் தலைவா்; அம்பேத்கா் சட்டக்கல்லூரி செனட் உறுப்பினா், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக செனட் உறுப்பினா்.
குடும்பம்: பிரிஸில்லா செல்வமாதா, மகள் டிமோனா