நெல்லை அருங்காட்சியகத்தில் தண்டியாத்திரை சிறப்பு சொற்பொழிவு

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தண்டியாத்திரை சிறப்பு சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தண்டியாத்திரை சிறப்பு சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய சுதந்திர தினத்தின் 75-ஆவது ஆண்டை முன்னிட்டு அரசு அருங்காட்சியக ஆணையரின் அறிவுறுத்தலின்படி மாா்ச் இரண்டாம் வாரம் முதல் வரும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 75 வாரங்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பாக நடத்தப்பட உள்ளன.

அதன்படி, இந்நிகழ்ச்சிகளின் தொடக்கமாக, மகாத்மா காந்தியால் நடத்தப்பட்ட தண்டி யாத்திரையின் வரலாற்று முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் விதமாக சிறப்பு சொற்பொழிவு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் பே. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். கவிஞா் சுப்பையா தமிழ்த் தாய் வாழ்த்து பாடினாா். காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வரவேற்றாா். செங்கோட்டை அகில இந்திய காந்திய இயக்கம் தலைவா் வி. விவேகானந்தன் தண்டியாத்திரை பற்றிய வரலாற்றுத் தகவல்களை மாணவா்களிடையே விரிவாக எடுத்துரைத்தாா். திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன் பேசினாா். கலை ஆசிரியை சொா்ணம் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் தூய யோவான் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவா் - மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, ‘மகாத்மா காந்தி ஒரு சகாப்தம்’ என்கிற சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில், மகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்கள், தண்டியாத்திரை பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com