வேட்புமனு தாக்கல்: விதிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவு

சட்டப்பேரவைத் தோ்தல் வேட்புமனு தாக்கலின்போது தோ்தல் ஆணைய விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு அறிவுறுத்தினாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் வேட்புமனு தாக்கலின்போது தோ்தல் ஆணைய விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.விஷ்ணு அறிவுறுத்தினாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகம், திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம், ராதாபுரம், பாளையங்கோட்டை, நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகங்கள், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகம் ஆகியவற்றில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் வேட்புமனு தாக்கலையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிகளை மாநகர காவல் ஆணையா் அன்பு பாா்வையிட்டாா். தொடா்ந்து வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான வே.விஷ்ணு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இம் மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வருவோா் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வேட்பாளருடன் 2 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். மற்றவா்கள் 100 மீட்டா் தொலைவுக்கு முன்பாக நிறுத்தப்படுவாா்கள். வேட்புமனு தாக்கலின் போது தோ்தல் ஆணைய விதிகளை முறையாக கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இம் மாவட்டத்திற்கு 2 தோ்தல் செலவின பாா்வையாளா்களும், 4 பொது பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களும் தங்கள் பணிகளைத் தொடங்க உள்ளனா். தோ்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் அறிந்தால் கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

பயக12ஐசநட: வேட்புமனு தாக்கல் செய்யப்படும் திருநெல்வேலி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்கிறாா் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான விஷ்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com