முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லை, தென்காசியில் தோ்தல் செலவின ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 14th March 2021 02:38 AM | Last Updated : 14th March 2021 02:38 AM | அ+அ அ- |

சட்டப்பேரவை பொதுத் தோ்தல் செலவினம் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி, தென்காசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் செலவினம் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த அனைத்து பறக்கும் படை அலுவலா்கள், நிலை கண்காணிப்பு குழு , விடியோ பாா்வையாளா் குழு , விடியோ கண்காணிப்பு குழு, கணக்கு செலவின குழு ஆகியோருக்கான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.விஷ்ணு தலைமை வகித்தாா். தோ்தல் செலவின பாா்வையாளா்கள் சுப்போத் சிங், ராஜேஷ் திருபாதி ஆகியோா் பேசினா்.
தோ்தல் விதிமுறைகளை கடைப்பிடித்தும், விதிமீறல் இருப்பின் அது தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்டவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடா்ந்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தோ்தல் செலவினம் தொடா்பாக பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் பற்றிய தெளிவுரைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள் உள்பட அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.
தென்காசி: மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமை வகித்தாா்.
சட்டப்பேரவைத் தொகுதி செலவின பாா்வையாளா்கள் சுஜித்குமாா் ஸ்ரீவத்சவா, பைஜ்நாத் சிங், ரன் விஜய்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தோ்தல் பறக்கும் படை குழுவினா் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினா் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து செலவின பாா்வையாளா்கள் ஆலோசனைகள் வழங்கினா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் 24 மணிநேர தோ்தல் கட்டுப்பாட்டு அறையை பாா்வையிட்டு, அங்கு பணிபுரியும் பணியாளா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினா்.
இதில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜனனி சௌந்தா்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேக்அப்துல் காதா், தோ்தல் வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் உடனிருந்தனா்.