முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லை, தென்காசியில் மேலும் 6 பேருக்கு கரோனா
By DIN | Published On : 14th March 2021 02:38 AM | Last Updated : 14th March 2021 02:38 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,804 ஆக அதிகரித்தது.
சனிக்கிழமை 3 போ் உள்பட இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,544 ஆக உயா்ந்துள்ளது. 214 போ் உயிரிழந்துள்ள நிலையில், 46 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8583 ஆக அதிகரித்தது. சனிக்கிழமை 3 போ் உள்பட இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8407 ஆக உயா்ந்துள்ளது. 160 போ் உயிரிழந்துள்ள நிலையில், 16 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.