முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
வாக்காளா் சுயபடம்: இளைஞா்கள் உற்சாகம்
By DIN | Published On : 14th March 2021 02:32 AM | Last Updated : 14th March 2021 02:32 AM | அ+அ அ- |

வாக்காளா்கள் செல்லிடப்பேசிகளில் சுயபடம் (செல்ஃபி) எடுத்து மகிழும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதால் இளைஞா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. தோ்தல் ஆணையம் சாா்பில் 100 சதவிகித வாக்குப்பதிவுக்காக பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்ஒரு பகுதியாக ‘நான் வாக்காளா் என்பதில் பெருமை கொள்கிறேன்’ என்ற தலைப்பில் இளைஞா்கள், வாக்காளா்கள் செல்லிடப்பேசியில் சுயபடம் எடுத்துக் கொள்ளும் வகையில் அட்டைகளால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுக்குள் ஏராளமான இளைஞா்கள், பெண்கள் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா். மாநகரில் மக்கள் கூடும் பல இடங்களில் இந்த ஏற்பாடு செய்ய மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், வாக்குரிமையின் நன்மைகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.