முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்
By DIN | Published On : 14th March 2021 02:33 AM | Last Updated : 14th March 2021 02:33 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட வாக்குச் சாவடிகளில் புதிய வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்து வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வாக்காளா் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
வாக்காளா் பட்டியலில் கடந்த நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதத்தில் புதிதாக பெயா்களைச் சோ்த்தவா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டைகளை இணையவழியில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சனிக்கிழமை நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், கண்காணிப்பாளா்கள் ஆகியோா் முகாமில் பங்கேற்றனா்.
இதில் புதிதாக சோ்ந்த வாக்காளா்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை தெரிவித்து வாக்காளா் அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துச் சென்றனா்.
பயக13இஅஙடமுகாமில் வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து பெற்ற வாக்காளா்கள்.