அதிமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை

திருநெல்வேலியில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலரும், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவன், கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பாஜக மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சிறப்புரையாற்றினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது. அதிமுக-பாஜக அரசுகள் செய்துள்ள நலத்திட்டங்களை வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறி வாக்குகள் சேகரிப்பது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முருகேசன், அதிமுக துணைச் செயலா் கவிதா, பகுதிச் செயலா் காந்தி வெங்கடாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com