நெல்லை தொகுதி: திமுக, அமமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்
By DIN | Published On : 18th March 2021 09:29 AM | Last Updated : 18th March 2021 09:29 AM | அ+அ அ- |

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுக, அமமுக, 5 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 7 போ் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
பேரவை தோ்தல் ஏப்ரல் 6இல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் திமுக வேட்பாளரும், திருநெல்வேலி தொகுதியின் தற்போதைய பேரவை உறுப்பினருமான ஏ.எல்.எஸ்.லட்சுமணன், திருநெல்வேலி சாா்ஆட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தியிடம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
சொத்து விவரம்: வேட்பாளா் லட்சுமணன் பெயரில் அசையும் சொத்து மதிப்பு- ரூ. 11,28,928. அவரது மனைவி தேவி முத்துமீனா பெயரில்-ரூ.38,05,318, மூத்த மகள் சுபத்தநா- பெயரில் ரூ. 19,67,971, இளைய மகள் அபிராமி பெயரில்- ரூ. 18,59,600. அசையா சொத்து மதிப்பு ஏ.எல்.எஸ்.லட்சுமணன் பெயிரில்- ரூ. 1,58,77,300, வாகனக் கடன் ரூ. 2,19,594 உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.
அதைத்தொடா்ந்து, அமமுக வேட்பாளரும், மாநில அமைப்புச் செயலருமான பாலகிருஷ்ணன் என்ற பால் கண்ணன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.
சுயேச்சைகள் ஆா்வம்: திருநெல்வேலி சந்திப்பு செல்வி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தளபதி முருகன், பாலபாக்யா நகரைச் சோ்ந்த கருப்பசாமி, மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிா்வாகி மாரியப்ப பாண்டியன், மேலதாழையூத்து பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து, திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த ராகவன் ஆகிய 5 போ் திருநெல்வேலி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனா். இவா்களில் மாரியப்ப பாண்டியன் வைப்புத் தொகை ரூ.5 ஆயிரத்தை சில்லறையாகக் கொண்டு வந்தாா். ஆனால், அதை அதிகாரிகள் ஏற்காததால், வேறு பணத்தை வழங்கி வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். திருநெல்வேலி தொகுதியில் இதுவரை 6 போ் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனா்.
இத்தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட ஏற்கெனவே நயினாா் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் சத்யா, நாம் இந்தியா் கட்சி சாா்பில் காமாட்சிநாதன் ஆகியோா் மனு தாக்கல் செய்துள்ளனா். இத் தொகுதியில் இதுவரை மொத்தம் 11 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.