தெற்கு கள்ளிகுளத்தில் கபசுர குடிநீா் விநியோகம்

தெற்கு கள்ளிகுளம் ஓஎல்எஸ் மெட்ரிக் பள்ளி, புனித அலோசியஸ் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

தெற்கு கள்ளிகுளம் ஓஎல்எஸ் மெட்ரிக் பள்ளி, புனித அலோசியஸ் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

இந்த முகாமிற்கு தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த், வள்ளியூா் காவல் உதவி ஆய்வாளா் ஆல்வின் ஆகியோா் தலைமை வகித்து, மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா்.

இதில், உடற்கல்வி ஆசிரியா் அலெக்ஸ் ரெனோ, கிரேட்டன் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் ஜாண்கென்னடி, முருகன், கௌரவத் தலைவா் துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புனித அலோசியஸ் பள்ளித் தலைமையாசிரியை வேளாங்கண்ணி வரவேற்றாா். ஆசிரியா் கே.ஏ.சி.ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com