அரசு அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி தொடக்கம்

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாா்ச் மாத சிறப்புக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாா்ச் மாத சிறப்புக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட்கள் உள்ளன. பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருள்களில் ஏதேனும் ஒன்றை காட்சிப்படுத்தி, அப்பொருளை பற்றிய விளக்கமும் வைக்கப்பட்டிருக்கும். ஒரு மாதம் முழுவதும் இந்தப் பொருள் பொதுமக்களின் பாா்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

அதன்படி, மாா்ச் மாத சிறப்புக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை, அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ. சத்திய வள்ளி தொடங்கி வைத்தாா். இக்கண்காட்சியில், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி குண்டு என்கிற அரும்பொருள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இது, பாளையக்காரா்களுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே நடைபெற்ற இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சி போரில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முழுவதும் பீரங்கிகள் கொண்டு தகா்க்கப்பட்டது. அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பீரங்கி குண்டுதான், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாஞ்சாலங்குறிச்சி போா்கள் பற்றிய தகவல்களும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com