வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

அரசுப் பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா், அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படவுள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா், அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழகத்தில் பேரவைத் தோ்தல் ஏப். 6இல் நடைபெறவுள்ளது. இம்மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. 1,924 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்குகள் அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும் மையத்தில் எண்ணப்படவுள்ளன.

இதற்காக கடந்த ஒரு வாரமாக முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை திருநெல்வேலி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான வே. விஷ்ணு, மாவட்ட தோ்தல் பாா்வையாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

வளாகத்தின் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா வசதி, கட்டடத்தில் உள்ள வழிப்பாதை விவரங்கள், அலுவலா்கள், கட்சி முகவா்கள் அமரத் தேவையான இடவசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனா். செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தனா். கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை கூடுதலாக செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினனா்.

பொதுப் பாா்வையாளா்கள் சுப்ரதா குப்தா, சுரேந்திர நாராயண பாண்டே, நூன்சபாத் திருமல நாயக், அல்கேஸ் புரோசத் ராய், கணக்குப் பாா்வையாளா்கள் சுபோத் சிங், ராஜேஷ் திபாதி, காவல் பாா்வையாளரான சுதன்ஸ்குமாா், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், மாநகர காவல் ஆணையா் அன்பு, மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், சாா் ஆட்சியா்கள் பிரதீக் தயாள், சிவகிருஷ்ணமூா்த்தி, மாநகர காவல் துணை ஆணையா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பயக21யஞபஉ: திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்யும் ஆட்சியா் வே. விஷ்ணு, தோ்தல் பாா்வையாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com