நெல்லையில் கரோனா பாதுகாப்பு ஆடையுடன் வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் கரோனா பாதுகாப்பு ஆடையுடன் ரத வீதியில் வாக்கு சேகரித்தார்.
நெல்லையில் கரோனா பாதுகாப்பு ஆடையுடன் வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்.
நெல்லையில் கரோனா பாதுகாப்பு ஆடையுடன் வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் கரோனா பாதுகாப்பு ஆடையுடன் ரத வீதியில் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஸ்ரீதர் ராஜன் என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். 

கரோனா ஆடையுடன் திருநெல்வேலி ரத வீதிகளில் வாக்காளர்களுக்கு முகக்கவசங்களை வழங்கி ஆட்டோ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
 அவர் செய்தியாளர்களிடம் கூறியது: முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறேன்.

திருநெல்வேலி தொகுதியில் வேலைவாய்ப்பின்மை, பாசன கால்வாய்களில் கழிவுநீர் கலக்கும் அவலம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. 

அவற்றை மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடிவு செய்து தளத்திற்கு வந்துள்ளேன்.

நான் வெற்றி பெற்றால் நான் ஒரு குளத்திற்கு தாமிரபரணி தண்ணீர் கிடைக்கச் செய்வேன். கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் கூடுதலாக தொழிற்சாலைகள் வர பாடுபடுவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com