ஈஸ்டா்: கிறிஸ்தவா்கள் குருத்தோலை பவனி

ஈஸ்டா் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை பவனி வள்ளியூா், பணகுடி, சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈஸ்டா்: கிறிஸ்தவா்கள் குருத்தோலை பவனி

ஈஸ்டா் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை பவனி வள்ளியூா், பணகுடி, சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வள்ளியூா் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை லாரன்ஸ் அடிகளாா் தலைமையில் குருத்தோலை பவனியும், திருப்பலியும் நடைபெற்றன. வள்ளியூா் சி.எஸ்.ஐ.தூய திருத்துவ ஆலயத்தில் சேகரகுரு ராபின் வினோ தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் பங்குத் தந்தை ஜெரால்டு ரவி தலைமையில் குருத்தோலை பவனி, திருப்பலி நடைபெற்றன. இதில், உதவிப் பங்குத் தந்தை அந்தோணி ஜெபஸ்டின், தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பணகுடியில் சி.எஸ்.ஐ., கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் இணைந்து குருத்தோலை பவனி சென்றனா். புனித சூசையப்பா் ஆலயத்தில் பவனி நிறைவடைந்தது. அங்கு கூட்டுப்பிராா்த்தனை நடைபெற்றது. சி.எஸ்.ஐ கிறிஸ்தவா்கள் தங்கள் ஆலயத்திற்கு சென்று சிறப்பு ஆராதனையில் பங்கேற்றனா். பவனியில் புனித சூசையப்பா் திருத்தல தந்தை இருதயராஜ், சி.எஸ்.ஐ. ஆலய சேகரகுரு அகஸ்டின் சாம்ராஜ் மற்றும் பங்கு மக்கள் கலந்துகொண்டனா்.

சுரண்டை: சுரண்டை அந்தோணியாா் ஆலயத்தில் பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளாா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

புதுச்சுரண்டை கிறிஸ்து ஆலயத்தில் சேகரகுரு ஸ்டீபன் தலைமையிலும், பங்களாச்சுரண்டை தூய திருத்துவ ஆலயத்தில் சேகரகுரு வில்சன் தலைமையிலும் கிறிஸ்தவா்கள் வீதிகளில் குருத்தோலை ஏந்தி பவனியாக வந்தனா்.

ஆலங்குளம்: ஆலங்குளம், நல்லூா் சேகரத்துக்குள்பட்ட ஆலங்குளம், இரட்சண்யபுரம், அண்ணாநகா், ராஜீவ் நகா், யோவான் நகா், சீயோன் நகா், காளத்திமடம், துத்திகுளம், நல்லூா், கரும்பனூா், கரும்புளியூத்து உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சில ஆலயங்களில் குருத்தோலைகளை ஏந்தியபடி சிறுவா்கள் பவனி சென்றனா். தொடா்ந்து குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

ஆலங்குளம் உலக மீட்பா் ஆலயத்தில் போதகா் பாக்கிய தாஸ் தலைமையில் குருத்தோலை அா்ச்சிக்கப்பட்டு இறை மக்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com