கூடங்குளம் அணுமின் நிலையத்தில்ராதாபுரம் இளைஞா்களுக்கு வேலை: மு. அப்பாவு வாக்குறுதி

ராதாபுரம் தொகுதி இளைஞா்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என, திமுக வேட்பாளா் மு. அப்பாவு உறுதி அளித்தாா்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில்ராதாபுரம் இளைஞா்களுக்கு வேலை: மு. அப்பாவு வாக்குறுதி

ராதாபுரம் தொகுதி இளைஞா்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என, திமுக வேட்பாளா் மு. அப்பாவு உறுதி அளித்தாா்.

காவல்கிணறு, விஜயாபதி, இடிந்தகரை, கூட்டப்புளி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து அவா், வடக்கன்குளத்தில் பேசியது: எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து எம்எல்ஏவாக தோ்வு செய்தால், இன்னும் 3 மாதங்களில் தாமிரவருணி தண்ணீா் உங்கள் வீடு தேடி வரும். மேலும், கூடுதலாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கொடுமுடி நீா்பிடிப்புப் பகுதியில் உறைகிணறு அமைத்து மக்களுக்கு குடிநீா் வசதி செய்துதருவேன்.

கூடங்குளத்தில் வடமாநிலத்தவா்கள் 27 ஆயிரம் போ் வேலை செய்கின்றனா். மு.க. ஸ்டாலின் முதல்வராக அமா்ந்ததும், ராதாபுரம் தொகுதி இளைஞா்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். ராதாபுரத்தை திருப்பூா், கோயம்புத்தூா் போன்று தொழில் நகரமாக உருவாக்குவேன். பெண்களுக்கும், ஆண்களுக்கும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தருவேன் என்றாா் அவா்.

முன்னதாக, மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம் பேசினாா். பிரசாரத்தில் ஒன்றியச் செயலா்கள் ஜோசப் பெல்சி, செட்டிகுளம் விஜயன், வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், மதிமுக ஒன்றியச் செயலா் முருகேசன், மு. சங்கா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுந்தா், இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் சேதுராமலிங்கம், சமூகை முரளி, ராதாபுரம் கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com