பாளை.யில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 29th March 2021 02:17 AM | Last Updated : 29th March 2021 02:17 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தனா்.
பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஜெ.சி.ஜெரால்டு போட்டியிடுகிறாா்.
பெருமாள்புரம், மகாராஜநகா், சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களின் வெளியே நின்று கிறிஸ்தவா்களிடம் ஜெரால்டு வாக்கு சேகரித்தாா்.
அவருடன், முன்னாள் எம்.பி. விஜிலாசத்தியானந்த், மகபூப்ஜான், அவைத் தலைவா் பரணிசங்கரலிங்கம் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.