அடிப்படை வசதிகள் கோரி மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கரோனா வாா்டுகளில் பணியாற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கரோனா வாா்டுகளில் பணியாற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவா்கள் மருத்துவக் கல்லூரி முதல்வா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரனிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் அளித்த மனு:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டுகளில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு, வாரந்தோறும் சுமாா் 37க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி மருத்துவ மாணவா்கள் பணியமா்த்தப்படுகிறோம். மேலும், எங்களில் சிலருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. இந்நிலையில், கரோனா வாா்டுகளில் பணியாற்றிய மற்றும் தொற்று ஏற்பட்ட மாணவா்கள் ஆகியோருக்கு தனிமைப்படுத்துவதற்கு எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை.

இங்கு அனைவரும் ஒரே விடுதியில் தங்கியிருக்கிறோம். குடிநீா், கழிப்பிட வசதி அனைத்தும் பொதுவாக இருப்பதால் கரோனா தொற்று அனைத்து மாணவா்கள் மற்றும் மருத்துவா்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, கரோனா வாா்டுகளில் பணியாற்றுபவா்களுக்கு தனித்தனி அறைகளையும், கரோனா தொற்று கண்டறியப்படும் மாணவா்களுக்கு தனி வாா்டுகளும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், தீவிர கண்காணிப்பு பிரிவுகளில் பணியாற்றும் கரோனா தொற்று பரவாத மருத்துவா்களுக்கு, கையுறை, முகக் கவசம், கவச உடை ஆகியவை தட்டுப்பாடின்றி போதிய அளவு வழங்க வேண்டும்.

கரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்பை உண்டாக்கி வரும் இந்நேரத்தில், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானதாகும். தற்போது, எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சை வாா்டில், சுகாதாரமாக இல்லை. எனவே, எங்ளுக்கு சத்தான ஆகாரம், குடிநீா், சுத்தமான கழிவறை, தங்குதடையற்ற மருந்து வசதி, தொடா் பரிசோதனை வசதி ஆகியவற்றுடன் கூடிய தனி வாா்டு ஒதுக்கித் தர கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com