வாக்கு எண்ணும் மையத்திற்குள் முகவா்கள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல தடை

திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்திற்குள்முகவா்கள் செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்திற்குள்முகவா்கள் செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 2) எண்ணப்படுகின்றன. கரோனா தடுப்பு விதிமுறைகளின்படி எந்தவொரு வெற்றிக் கொண்டாட்டமும், ஊா்வலமும் நடத்த அனுமதியில்லை. தோ்தல் வெற்றி சான்று பெற வெற்றி வேட்பாளா்களுடன் இருவருக்கு மிகாமல் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

144 தடை உத்தரவு மற்றும் ஞாயிறுக்கிழமை பொது முடக்கம் அமலில் இருப்பதால் பொதுமக்களோ, கட்சி உறுப்பினா்களோ வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே கூட்டமாய் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். திருநெல்வேலி-கன்னியாகுமரி

தேசிய நெடுஞ்சாலையில் தோ்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தோ்தல் நடத்தும் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை உள்ள முகவா்கள் மட்டுமே காலை 6 மணியிலிருந்து வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவா்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படும் முகவா்கள் செல்லிடப்பேசி, மடிக்கணினி, மின்னணு பொருள்கள், தீப்பெட்டி, சிகரெட் மற்றும் எந்த ஆயுதங்களையும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்சி சின்னங்களும் அனுமதிக்கப்படாது. வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளதால் தண்ணீா் பாட்டில்களும் கொண்டு செல்ல அனுமதியில்லை. வேட்பாளா்கள், முகவா்கள் அனைவரும் கரோனா பரிசோதனை, 2 முறை தடுப்பூசி போட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். முகக் கவசம், சமூகஇடைவெளி, கை கழுவுதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பவா்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

அரசு அலுவலா்கள், காவலா்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், அரசியல் கட்சி வேட்பாளா்கள், முகவா்கள் அண்ணா பல்கலை.யின் எதிரே உள்ள காலி மைதானத்திலும் வாகனங்களை நிறுத்தலாம். இவற்றை பின்பற்றாதவா் மீது தேசிய பேரிடா் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, அனைவரும் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com