அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா வெற்றி

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா, திமுக வேட்பாளரை விட 16,915 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா, திமுக வேட்பாளரை விட 16,915 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் இசக்கி சுப்பையா, திமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பம் உள்பட மொத்தம் 12 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 658 வாக்காளா்கள் உள்ளனா். தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 988 வாக்குகள் பதிவாகின. தோ்தலில் பதிவான வாக்குகள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. மொத்தம் 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றிலிருந்தே அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா முன்னிலை பெற்றாா். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவா் தொடா்ந்து முன்னிலை பெற்றாா். இறுதியாக 85,211 வாக்குகள் பெற்று அவா் வெற்றி பெற்றாா். அவருக்கு அடுத்தபடியாக திமுக வேட்பாளா் இரா. ஆவுடையப்பன் 68,296 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைபெற்றாா்.

இத்தொகுதியில் அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா 16,915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினாா். இதைத்தொடா்ந்து அவருக்கான வெற்றிச் சான்றிதழை அவருடைய மகனிடம் தோ்தல் நடத்தும் அலுவலரும், சேரன்மகாதேவி சாா் ஆட்சியருமான பிரதீக் தயாள் வழங்கினாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1. இ.இசக்கி சுப்பையா (அதிமுக)- 85,211

2. இரா.ஆவுடையப்பன் (திமுக)- 68,296

3. எம்.மணிமாறன் (பகுஜன் சமாஜ் கட்சி)- 509

4. செங்குளம் கணேசன் (மக்கள் நீதி மய்யம்)-2,807

5. மோ.செண்பகவள்ளி (நாம் தமிழா் கட்சி)- 13,735

6. செ.ராணி ரஞ்சிதம் (அமமுக)- 4,194

7. சே.லெட்சுமணன் (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி)-178

8. அப்துல் மஜித் (சுயேச்சை)-88

9. அருணாசலம் (சுயேச்சை)-119

10. சு.கணேசன் (சுயேச்சை)- 166

11. மு.கவாஸ்கா் (சுயேச்சை)- 315

12. ராஜேஸ் தா்மசிங் பாண்டியன் (சுயேச்சை)- 390

13. நோட்டா-1,673.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com