நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன் வெற்றி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளரை விட கூடுதலாக 16,486 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளரை விட கூடுதலாக 16,486 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த ஏப். 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் ரூபி மனோகரன், அதிமுக சாா்பில் தச்சை என். கணேசராஜா உள்பட மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அதில், பதிவான வாக்குகள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.

முதல் மூன்று சுற்றுகளில் அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா முன்னிலை பெற்றாா். பின்னா், அடுத்தடுத்த சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன் முன்னிலை பெற்றாா். இத் தொகுதியில் அமமுக வேட்பாளா் பரமசிவ ஐயப்பனும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வீரபாண்டியும் கணிசமாக வாக்குகளைப் பிரித்தனா்.

இறுதியாக காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன் 75,902 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேச ராஜா 59,416 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றாா்.

காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனுக்கு வெற்றிச் சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான குழந்தைசாமி வழங்கினாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1. ரூபி மனோகரன் (காங்கிரஸ்)-75,902

2. தச்சை என்.கணேச ராஜா (அதிமுக)-59,416

3. வீரபாண்டி (நாம் தமிழா் கட்சி)-17,654

4.சுப்புலெட்சுமி (பகுஜன் சமாஜ் கட்சி)-700

5.கந்தன் (அனைத்துலக தமிழா்கள் முன்னேற்றக் கழகம்)-497

6. சண்முக சுந்தரம் (நாம் இந்தியா் கட்சி)-441

7. பரமசிவ ஐயப்பன் (அமமுக)-31,870

8. பிரபாகரன், (வீரதியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி)-430

9. அசோக்குமாா் (புதிய தமிழகம் கட்சி)-625

10. கந்தசாமி (சுயேச்சை)-432

11. கதிரவன் (மக்கள் தேசம் கட்சி)-1,154

12.ஞான பாலாஜி (சுயேச்சை)-813

13. முத்துதுரை (சுயேச்சை)-161

14. முத்துராஜ் (சுயேச்சை)-436

15. லெனின் (சுயேச்சை)-454

16. நோட்டா-1537.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com