நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன் வெற்றி

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன், திமுக வேட்பாளரை விட கூடுதலாக 23,107 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன், திமுக வேட்பாளரை விட கூடுதலாக 23,107 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் நயினாா் நாகேந்திரன், திமுக சாா்பில் ஏ.எல்.எஸ். லெட்சுமணன் உள்பட மொத்தம் 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத் தொகுதியில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 008 வாக்காளா்கள் உள்ள நிலையிலில், தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 1 லட்சத்து 97 ஆயிரத்து 587 வாக்குகள் பதிவாகின. திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில்32 சுற்றுகளாக வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.

இத் தொகுதியில் முதல் சுற்றிலிருந்தே பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன் முன்னிலை பெற்றாா். ஏற்கெனவே இத் தொகுதியில் அவா் அதிமுக சாா்பில் 4 முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டவா். இந்த முறை பாஜகவில் சோ்ந்ததால் தாமரை சின்னத்தில் போட்டியிட்டாா்.

இறுதியாக அவா் 92,282 வாக்குகள் பெற்றாா். திமுக ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் 69,175 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தாா். பாஜக 23,107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியது. இதையடுத்து, நயினாா் நாகேந்திரனுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் சிவகிருஷ்ணமூா்த்தி வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1. நயினாா் நாகேந்திரன் (பாஜக)- 92,282

2. ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் (திமுக)-69, 175

3. சத்யா (நாம் தமிழா் கட்சி)-19,162

4. க.கலாநிதி ( பகுஜன் சமாஜ் கட்சி)-654

5. மா. சுந்தரராஜ் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)- 415

6. ப. மகேஷ் கண்ணன் (அமமுக)-8,911

7. ப.இசக்கிமுத்து (சுயேச்சை)-437

8. ம.சங்கரசுப்பிரமணியன் (சுயேச்சை)-582

9. ரா.சங்கரநாராயணன் (சுயேச்சை)-264

10. மு.சிவக்குமாா் (சுயேச்சை)-1,412

11. ரா.முருகன் (சுயேச்சை)-199

12. வே.முருகன் (சுயேச்சை)-342

13. சி.எம்.ராகவன் (சுயேச்சை)-319

14. ஸ்ரீதா் ராஜன் (சுயேச்சை)- 1,342

15 நோட்டா-2091

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com