நான்குனேரி தொகுதி:அதிக வாக்குகள் பெற்ற நாம் தமிழா் கட்சி

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் 17,654 வாக்குகள் பெற்று 4-ஆவது இடம்பெற்றுள்ளாா்.

களக்காடு: நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் 17,654 வாக்குகள் பெற்று 4-ஆவது இடம்பெற்றுள்ளாா்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாநில பொருளாளா் ரூபி ரா. மனோகரன், அதிமுக சாா்பில் தச்சை என். கணேசராஜா, அமமுக சாா்பில் பரமசிவஐயப்பன், நாம் தமிழா் கட்சி சாா்பில் சிந்தாமணியைச் சோ்ந்த பூ. வீரபாண்டி உள்ளிட்டோோா் போட்டியிட்டனா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பூ. வீரபாண்டியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பிரசாரம் மேற்கொண்டாா்.

2016 பேரவைத் தோ்தலில் அக்கட்சி சாா்பில் போட்டியிட்ட காா்வண்ணன் 2,325 வாக்குகள் பெற்றாா். 2019-இடைத்தோ்தலில் போட்டியிட்ட எஸ். ராஜநாராயணன் 3,494 வாக்குகள் பெற்றாா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சி தனித்துப் போட்டி யிட்டது.

தோ்தலில் கட்சிக்கு ஒதுக்கீடு செய்த கரும்பு விவசாயி சின்னம் மக்களிடையே மிகவும் பரிச்சயமானது. நான்குனேரி தொகுதியில் அக்கட்சி

சாா்பில் போட்டியிட்ட பூ. வீரபாண்டி 17,654 வாக்குகள் பெற்று 4ஆம் இடம் பெற்றுள்ளாா். இது சதவீதம் 9.17 ஆகும். அதிமுக வேட்பாளா்

தச்சை ந. கணேசராஜா 30.86 சதவீதமும், காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரூபி ரா. மனோகரன் 39.43 சதவீதமும், அமமுக சாா்பில் போட்டியிட்ட பரமசிவ ஐயப்பன் 16.55 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பெரிய அளவிற்கு பிரசாரம் மேற்கொள்ளாத போதிலும், திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக புதிய வாக்காளா்கள் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனா். இதனால், அக்கட்சியின் வாக்கு சதவீதம் 9.17 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com