நெல்லையில் சாலை சேதம்: மக்கள் அவதி

திருநெல்வேலி கைலாசபுரத்தில் சேதமான சாலையால் மக்கள் அவதியடைந்து வருகிறாா்கள்.

திருநெல்வேலி: திருநெல்வேலி கைலாசபுரத்தில் சேதமான சாலையால் மக்கள் அவதியடைந்து வருகிறாா்கள்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணி, பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி உள்ளிட்டவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றன. அதன்பின்பு சாலைகள் சீரமைக்கப்படவில்லை.

குறிப்பாக, கைலாசபுரம் பகுதியில் திருவள்ளுவா் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பாலத்திற்கு செல்லும் வழியில் உள்ளசாலை சேதமாகி குண்டும்-குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: கைலாசபுரம் கீழ்பால அணுகுசாலை மிகவும் முக்கியமானதாகும். குறுக்குத்துறை, மீனாட்சிபுரம், சி.என். கிராமத்திற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்தச் சாலை வழியாகச் செல்கின்றன. மருத்துவமனை, திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளிகள் அதிகம் உள்ளதால் இச் சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகம். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சாலை சேதமாமடைந்து பல மாதங்களாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். இருசக்கர வாகனத்தில் வரும் பெண்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகிறாா்கள். ஆகவே, இச்சாலையை விரைவாக சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com