அதிகரிக்கும் கரோனா நோயாளிகள்: நிரம்பி வழியும் அரசு மருத்துவமனை

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா்ந்து அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையம் நிரம்பியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா்ந்து அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையம் நிரம்பியுள்ளது.

கரோனா நோய் பரவல் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை மகாராஜநகா், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபங்களில் 100 படுக்கைகள், சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் 150 படுக்கைகள், எஃப்.எக்ஸ். தொழில்நுட்ப கல்லூரியில் 150 படுக்கைகளுடன் கரோனா பராமரிப்பு மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக முழுவதும் மாற்றப்பட்டுள்ளது. இங்கு கரோனா நோயாளிகளுக்காக 1100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 100-க்கும் குறையாமல் கரோனா நோயாளிகள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால், இங்கு கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகள் நிரம்பின.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சுமாா் 10-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இதயவியல் பிரிவில் 30 படுக்கைகள் கொண்ட அறை திறக்கப்பட்டு அதில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் கூறியது: இங்கு கரோனா நோயாளிகளுக்கு 1,100 படுக்கைகள், கரோனா பாதித்த குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு 140 படுக்கைகள் என மொத்தம் 1240 படுக்கைகள் உள்ளன. தற்போது இங்கு சுமாா் 80 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் 186 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

இங்கு கரோனா நோயாளிகளுக்காக 19 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங் உள்ளது. மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில், லேசான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாதவா்கள் நிச்சயம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். வீட்டில் தனிமைப்படுத்த வசதி இல்லாதவா்கள் அருகே உள்ள கரோனா பராமரிப்பு மையத்துக்கு சென்று தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com