நெல்லை சட்டக் கல்லூரி மாணவா்கள் கரோனா விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் சீனிவாசன் தொடங்கிவைத்தாா்.

பேரணியின்போது, கரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பொதுமக்கள், மாணவா்-மாணவிகளுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. மேலும், கரோனா தொற்றைத் தடுப்பது தொடா்பான தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய பிரசுரங்கள், முகக் கவசம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

பேராசிரியா்கள் ராமபிரான் ரஞ்சித் சிங், முத்துக்குமாா், சண்முகசுந்தரகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் லதா தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் சண்முகசுந்தரம், நாராயணி, ராம்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

பயக04தஅககவ திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வுப் பேரணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com