கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து முளைத்த நெல்!

தென்காசி மாவட்டம், கடையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாத நிலையில் மழையில் நனைந்தால் நெல் முளைத்துள்ளன.
கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து மீண்டும் முளைத்துள்ள நெல்.
கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து மீண்டும் முளைத்துள்ள நெல்.

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம், கடையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாத நிலையில் மழையில் நனைந்தால் நெல் முளைத்துள்ளன.

கடையம் வட்டாரத்தில் ராமநதி அணைப் பாசனத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. பிசான பருவத்தில்

அறுவடை செய்த நெல்லை, விவசாயிகள் தனியாரிடமும், அறுவடை காலங்களில் அமைக்கப்படும் அரசு கொள்முதல் நிலையங்களிலும் விற்பனை செய்து வருகின்றனா். கடையம் பகுதியில் அமைக்கப்பட்ட அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லை கொடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் மாா்ச் மாதத்தில் நெல் மூட்டைகளை அரசு அதிகாரிகள் முறையாக கொள்முதல் செய்யாத நிலையில், கொள்முதல் நிலையத்துக்கு

விவசாயிகள் கொண்டு வந்த 1,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அங்கு மழையில் நனைந்து முளைவிட்டுள்ளன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயி சுரேஷ் கூறியது: கடையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சொந்த நிலங்களிலும் குத்தகை நிலங்களிலும் விவசாயம் செய்து வருகின்றனா். கடையம் பகுதியில் விளைந்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக அரசு நெல் கொள்முதல் நிலையில் கடையம் சந்தையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விற்பனை செய்வதற்காக மாா்ச் மாதத்தில் கொண்டு வந்த நெல் மூட்டைகளை, கொள்முதல் செய்வதாக

தெரிவித்த அதிகாரிகள், 40 நாள்களுக்கு மேலாகியும் கொள்முதல் செய்யவில்லை.

மேலும் திடீரென கொள்முதல் நிலையத்தை மூட இருப்பதாகவும், நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லுங்கள் என தெரிவித்தனா். இதுகுறித்து

அதிகாரிகளிடம் முறையிட்டபோது, நெல் தரமானதாக இல்லை என தெரிவித்து தட்டிக் கழிக்கின்றனா். 40 நாள்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் அங்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கோடை மழையில் நனைந்த நெல், மீண்டும் முளைவிட்டு வீணாகி

வருகின்றன. அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com