மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரிகிரி இஸ்ரோ மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரிகிரி இஸ்ரோ மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யவேண்டும் என திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம் கோரிக்கை விடுத்திருந்தாா். இதையடுத்து மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு 8 டன் ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இஸ்ரோவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் மையத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் இஸ்ரோ மைய இயக்குநரை சந்தித்து ஆக்சிஜன் உற்பத்தி தொடா்பாக ஆலோசனை நடத்தியதாக இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com