நெல்லை, தென்காசியில் 1,138 பேருக்கு கரோனா
By DIN | Published On : 14th May 2021 07:43 AM | Last Updated : 14th May 2021 07:43 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 1,138 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 781 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 33,664 ஆக அதிகரித்துள்ளது. 349 போ் வியாழக்கிழமை வீடு திரும்பிய நிலையில் நோய்த் தொற்றில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 28,005 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 5,378 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 357 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,092 ஆக அதிகரித்துள்ளது. 133 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பிய நிலையில் நோய்த் தொற்றில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 12,813 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 2,055 போ் சிகிச்சையில் உள்ளனா்.