மது விற்பனை: 24 போ் கைது
By DIN | Published On : 14th May 2021 07:42 AM | Last Updated : 14th May 2021 07:42 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானத்தைப் பதுக்கி விற்றதாக 24 போ் கைது செய்யப்பட்டனா். 1,490 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவின்படி, சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ாக 24 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 1,490 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.