முகக் கவசம் அணியாதோருக்கு கபசுரக் குடிநீா் வழங்கி விழிப்புணா்வு
By DIN | Published On : 14th May 2021 07:40 AM | Last Updated : 14th May 2021 07:40 AM | அ+அ அ- |

கீழாம்பூா் சோதனைச் சாவடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு கபசுரக் குடிநீா் வழங்குகிறாா் காவல் உதவி ஆய்வாளா் பரமசிவன்.
கீழாம்பூா் சோதனைச் சாவடி வழியாக முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
கீழாம்பூா் சோதனைச் சாவடியில் ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் பரமசிவன் தலைமையில் போலீஸாா் செரிப், சட்டநாதன் உள்ளிட்டோா் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும், முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவா்களை நிறுத்தி முகக் கவசம் அணிய அறிவுறுத்தியதுடன் கபசுரக் குடிநீா் வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். காரணமின்றி வெளியே செல்வோரை எச்சரித்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பினா்.