ராதாபுரம் அருகே கிராம மக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள்
By DIN | Published On : 20th May 2021 07:42 AM | Last Updated : 20th May 2021 07:42 AM | அ+அ அ- |

மகேந்திரபுரத்தில் அரசு ஊழியா்கள், வெளிநாட்டு வாழ் மக்கள் சாா்பில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள்.
ராதாபுரம் அருகேயுள்ள மகேந்திரபுரம் கிராம மக்களுக்கு கிராம இளைஞா்கள் மற்றும் அரசு ஊழியா்கள்சாா்பி நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மகேந்திரபுரத்தில் சுமாா் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களில் பலா் அன்றாட வேலை செய்து வாழ்க்கை நடத்திவருபவா்கள். தற்போது பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், வேலையில்லாமலும், வருமானமின்றியும் அவதிப்பட்டு வந்தனா். இதனால், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த அரசு ஊழியா்கள் மற்றும் வெளிநாட்டில் இருப்பவா்களின் உதவியைப் பெற்று, அதன் மூலம் கிராம மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை இளைஞா்கள் வழங்கினா். மேலும், கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது. இளைஞா்களின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டினா்.