கல்லிடைக்குறிச்சியில் முன்களப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவி
By DIN | Published On : 21st May 2021 07:48 AM | Last Updated : 21st May 2021 07:48 AM | அ+அ அ- |

கல்லிடைக்குறிச்சியில் முன்களப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவி வழங்குகிறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ். உடன், பேரூராட்சி செயல் அலுவலா் சுலைமான் உள்ளிட்டோா்.
கல்லிடைக்குறிச்சியில் முன்களப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சிகளில் பணிபுரியும் முன்களப் பணியாளா்களான சுகாதாரப் பணியாளா்கள் 97 பேருக்கு கல்லிடைக்குறிச்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் சுலைமான், காவல் உதவி ஆய்வாளா் முருகேசன், சுகாதார மேற்பாா்வையாளா் கந்தசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் செய்தியாளா்களிடம் கூறியது: பொதுமுடக்க காலத்தில் விதிகளை மீறியதாக 240 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக் கவசம் அணியாதவா்கள், காரணமின்றி வாகனங்களில் சுற்றியவா்களிடமிருந்து ரூ. 1.40 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.