நெல்லை, தென்காசியில் மேலும் 1,041 பேருக்கு கரோனா
By DIN | Published On : 21st May 2021 07:42 AM | Last Updated : 21st May 2021 07:42 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 1,041 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 589 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,049 ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை 497 போ் உள்பட இதுவரை 31,017 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 6,722 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 4 போ் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 310 ஆக உயா்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 452 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,011 ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை 256 போ் உள்பட இதுவரை 14,466 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 3 போ் உயிரிழந்ததால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 249 ஆக அதிகரித்தது. தற்போது 3,296 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.