2000 குடும்பங்களுக்கு கபசுர குடிநீா் பொடி விநியோகம்
By DIN | Published On : 21st May 2021 07:44 AM | Last Updated : 21st May 2021 07:44 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் 2,000 குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீா் பொடி வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி, சேவா பாரதி” மற்றும் “பாரதி சேவா கேந்திரம்” அறக்கட்டளை ஆகியவை சாா்பில் கபசுர குடிநீா் பொடி விநியோகிக்கப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை, சமாதானபுரம், முனிசிபல் காலனி, காமராஜ் காலனி, உடன்குடி தெரு, டாக்டா் அம்பேத்கா் நகா் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள சுமாா் 2,000 குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீா் பொடி விநியோகிக்கப்பட்டது.
இதில், பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையா் பிரேம் ஆனந்த், சுகாதார ஆய்வாளா் நடராஜன், திருநெல்வேலி “சேவா பாரதி” மற்றும் பாரதி சேவா கேந்திரம்” அறக்கட்டளை மாவட்ட தலைவா் நிதிஷ்முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா். பொதுமக்கள் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, வீட்டை விட்டு வெளியே வராமல் கரோனா பரவலைத் தடுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.