அரசு அருங்காட்சியகம் சாா்பில் கைவினைப் பயிற்சி
By DIN | Published On : 21st May 2021 07:44 AM | Last Updated : 21st May 2021 07:44 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், என்பிஎன்கே கலை பண்பாடு மன்றம் சாா்பில் இணையவழி கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சியில் காய்ந்த இலையில் அழகிய உருவங்கள் வரையும் ஓவியப்பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மாவட்ட காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்தாா். பயிற்சியினை திருநெல்வேலி மாவட்ட அகமகிழ் கலைக்கூடத்தின் கைவினை மற்றும் ஓவியப்பயிற்சி ஆசிரியா் லெனின் நடத்தினாா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டனா். என்பிஎன்கே கலை பண்பாடு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் மு.வெ.ரா. நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினாா்.