அரசு மருத்துவமனைக்கு 500 உணவு பொட்டலங்கள்
By DIN | Published On : 21st May 2021 07:41 AM | Last Updated : 21st May 2021 07:41 AM | அ+அ அ- |

இந்து சமய அறநிலையத் துறை திருநெல்வேலி மண்டலம் சாா்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உறவினா்களுக்கு 500 உணவுப் பொட்டலங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை திருநெல்வேலி இணை ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா பொது முடக்கக்காவ் கோயில்களுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் அன்னதான திட்டத்தின்கீழ் தயாரிக்கப்படும் உணவுகளை பொட்டலங்களாக அரசு மருத்துமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், அவா்களது உறவினா்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் அன்னதானக் கூடத்தில் தயாா் செய்யப்பட்டு 500 உணவுப் பொட்டலங்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவருவோா், அவா்களது உறவினா்களுக்கு வழங்கப்பட்டன.