கடையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்: கொள்முதல் செய்வதாக அதிகாரிகள் உறுதி

கடையம் சந்தையில் அரசு கொள்முதல் செய்வதற்காக கொண்டு வரப்பட்டு கொள்முதல் செய்யப்படாமல், முளை விட்ட நிலையில் காணப்படும் நெல் அனைத்தும் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடையத்தில் அரசு கொள்முதலுக்காக கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாா்வையிடும் அதிகாரிகள்.

கடையம் சுற்றுப் புறங்களில் பிசான பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல், கடையம் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்காக கடந்த மாா்ச் மாதம் விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

சுமாா் 50 நாள்கள் கடந்த நிலையில் மே முதல் வாரத்தில் இந்த நெல் தரமானதாக இல்லையெனக் கூறி, கொள்முதல் செய்ய முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனராம்.

இதுகுறித்து உயரதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயிகள் புகாரளித்தனா். இதையடுத்து வியாழக்கிழமை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பகுதி அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள், கடையம் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாா்வையிட்டனா். அப்போது வெள்ளிக்கிழமை நெல் கொள்முதல் செய்யப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com