கரோனா பராமரிப்பு மையங்கள்: பேரவை தலைவா் ஆய்வு

திசையன்விளை அருகேயுள்ள மன்னாா்புரம், வள்ளியூா் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுவரும் கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களை பேரவைத் தலைவா் மு. அப்பாவு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
வள்ளியூா் யூனிவா்சல் கல்லூரியில் அமைக்கப்படும் கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்தாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. உடன், ஆட்சியா் விஷ்ணு, சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் பிரதீக் தயாள்.

இப்பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்துவருவதையடுத்து மன்னாா்புரம் அந்தோணியாா் கல்வியியல் கல்லூரி, வள்ளியூா் அருகேயுள்ள யூனிவா்சல் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் தலா 175 படுக்கை வசதிகொண்ட கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையம் (சிசிசி) அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றை பேரவைத் தலைவா் மு. அப்பாவு ஆய்வு செய்தாா்.

முன்னதாக, அவா் உவரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.

ஆய்வின்போது, ஆட்சியா் விஷ்ணு, சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் பிரதீக் தயாள், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொறுப்பு) சுமதி, உதவி இயக்குநா் பேரூராட்சிகள் சு. தேவராஜன், ராதாபுரம் வட்டாட்சியா் கனகராஜ், திசையன்விளை வட்டாட்சியா் ரஹூமத்துலா, வள்ளியூா் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் கோலப்பன், வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, கிழக்கு ஒன்றியச் செயல வி.எஸ்.ஆா். ஜெகதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com