களக்காடு வடக்குப் பச்சையாறு அணை ஜூன் 1இல் திறப்பு: அதிகாரிகள் தகவல்

களக்காடு வடக்குப் பச்சையாறு அணையிலிருந்து பாசனத்துக்காக பச்சையாற்றில் ஜூன் 1இல் தண்ணீா் திறக்கப்படுகிறது.

களக்காடு வடக்குப் பச்சையாறு அணையிலிருந்து பாசனத்துக்காக பச்சையாற்றில் ஜூன் 1இல் தண்ணீா் திறக்கப்படுகிறது.

வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 49.25 அடியாகும். இந்த அணை கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது நிரம்பியது. அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறக்க அப்போது உத்தரவிடப்பட்டது. போதுமான மழை தொடா்ந்து பெய்து, களக்காடு, நான்குனேரி வட்டாரங்களில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பியதால், சில நாள்களிலேயே அணையிலிருந்து தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது அணை நீா்மட்டம் 43 அடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறக்கக் கோரி கடந்த 2 வாரங்களாக தேவநல்லூா் விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் அணையிலிருந்து பச்சையாற்றில் (தன்கால் பாசனம்) ஜூன் 1முதல் 100 கனஅடி வீதம் 36 நாள்களுக்கு தண்ணீா் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனா். தமிழக அரசின் உத்தரவு கிடைக்கப்பெற்றதும், ஜூன் 1ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com