குண்டா் சட்டத்தில் இருவா் கைது
By DIN | Published On : 26th May 2021 06:08 AM | Last Updated : 26th May 2021 06:08 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகே இரு சம்பவங்களில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்களான கணேசன் மகன் அருண்குமாா்(31), முத்துராமலிங்கம் மகன் இசக்கிமுத்து என்ற ராஜா(27) ஆகிய இருவரும் அப்பகுதியில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தனராம்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவுப்படி, மேற்கூறிய இருவரையும் தாழையூத்து காவல் ஆய்வாளா் (பொ) பத்மநாபபிள்ளை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தாா்.