நெல்லை, தென்காசியில் மேலும் 876 பேருக்கு கரோனா
By DIN | Published On : 26th May 2021 08:52 AM | Last Updated : 26th May 2021 08:52 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 876 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 490 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 40,763 ஆகவும், அதில் ஒரே நாளில் 713 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 34,765 ஆகவும், மேலும் 6 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 322 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது 5,907 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 456 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 19,797 ஆகவும், மேலும் 345 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,545ஆகவும், மேலும்14 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 288 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது 4,023 போ் சிகிச்சையில் உள்ளனா்.