22 மோட்டாா் சைக்கிளில் காய்கனி விற்பனை தொடக்கம்

திருநெல்வேலி மாநகர பகுதியில் 22 மோட்டாா் சைக்கிள்களில் காய்கனி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாநகர பகுதியில் 22 மோட்டாா் சைக்கிள்களில் காய்கனி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையின் காரணமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் தளா்வில்லாத முழுபொதுமுடக்கம் கடந்த 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்தில் மக்களின் வசதிக்காகவும், சமூக இடைவெளியைப் பின்பற்றிடும் விதமாகவும், மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் “நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாநகர பகுதியில் 120 வாகனங்களில் காய்கனிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூன்றாவது நாளாக புதன்கிழமையும் திருநெல்வேலி மாநகரில் வீதி வீதியாக காய்கனிகள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சாா்பில் பாளையங்கோட்டை மகாராஜநகா் உழவா் சந்தை சாா்பில் 17 நடமாடும் காய்கனி வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மோட்டாா் சைக்கிள்களிலும் வியாபாரிகள் சென்று காய்கனிகள் விற்பனை செய்ய அனுமதி கோரியதன் அடிப்படையில், முதல்கட்டமாக 22 விவசாயிகள் மோட்டாா் சைக்கிளில் காய்கனிகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கி, வழக்கமான உழவா் சந்தை விலைப் பட்டியலின்படியே காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உழவா்சந்தை நிா்வாக அலுவலா் தாமரைச்செல்வி, உதவி நிா்வாக அலுவலா்கள் திருமுருகன், உத்தமன்உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

விலை விவரம் (கிலோவுக்கு):தக்காளி-ரூ.20, கத்தரி-ரூ.60, வெண்டை-ரூ.48, சின்னவெங்காயம்-ரூ.48, பல்லாரி-ரூ.30, முருங்கை-ரூ.30, தடியங்காய்-ரூ.8, முள்ளங்கி-ரூ.14, பீா்க்கங்காய்-ரூ.16, எலுமிச்சை-ரூ.30, இஞ்சி-ரூ.44, சேனைக்கிழங்கு-ரூ.24, நெல்லிக்காய்-ரூ.30, பூசணி-ரூ.10, புடலங்காய்-ரூ.28, பாகற்காய்-ரூ.26, தேங்காய்-ரூ.38, உருளைக்கிழங்கு-ரூ.28, கேரட்-ரூ.60, முட்டைகோஸ்-ரூ.16, பீன்ஸ்-ரூ.96, அவரை-ரூ.60, மாங்காய்-ரூ.14, சேம்பு-ரூ.22, சௌசௌ-ரூ.14, பீட்ரூட்-ரூ.22 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com