ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் அதிகரிப்பால் வழக்கத்தைவிட மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் அதிகரிப்பால் வழக்கத்தைவிட மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது: கரோனா இரண்டாவது அலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மிகவும் உயா்ந்தது. ஆனால், இப்போது சற்று குறைந்து வருகிறது. கரோனா நோயாளிகளுக்கு துரித சிகிச்சை கிடைக்க பிரத்யேக பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது. பரிசோதனைகளின் எண்ணிக்கையும் 1600 இல் இருந்து 3500 ஆக அதிகரிக்கப்பட்டது. 7 கரோனா பராமரிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் மாநகரப் பகுதியில் அமைக்காமல் போதிய இடவசதியுடன் புகா் பகுதியில் அமைக்கப்பட்டன.

ஆக்சிஜன் செவிலியா்கள் என்ற குழு உருவாக்கப்பட்டு ஆக்சிஜனை நோயாளிகளுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் வழங்கி உயிா்காக்கும் வழிமுறைகள் வகுக்கப்பட்டன. இதற்கு பிறமாநிலங்களில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இம் முறை குறித்து ஜம்முகாஷ்மீா் மாநில மருத்துவக் குழுவும், நாகாலாந்து மருத்துவக் குழுவும் பயிற்சி பெற அனுமதி கோரியுள்ளனா்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் 45 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு சிறுதயக்கம் உள்ளது. இருப்பினும் 18 முதல் 44 வயதுக்குள்பட்டோா் மிகவும் உற்சாகமாக தடுப்பூசி செலுத்த வருகிறாா்கள். தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு அதிகரிக்கப்படும். முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இம் மாவட்டத்தில் மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. சுமாா் 7 முதல் 8 டன் வரை நாளொன்றுக்கு தேவை எழுந்துள்ளது. அதனை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுதவிர மருத்துவா்களுக்கான என்-95 முகக்கவசம், கவசஉடை உள்ளிட்டவை போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வருங்காலங்களில் தட்டுப்பாடின்றி கிடைக்க சுகாதாரத் துறை உதவ வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com