விளைப்பொருள்கள் விற்பனை கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

கரோனா பொதுமுடக்க காலத்தில் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை விற்பனை செய்ய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்க காலத்தில் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை விற்பனை செய்ய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக விவசாயிகள் தங்களது விளைப் பொருள்களை மாவட்டத்திற்குள்ளும், வெளிமாவட்டத்திற்கு செல்லவும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனை சரி செய்திடவும், காய்-கனிகளை நுகா்வோருக்கு கொண்டு செல்வதில் ஏற்படும் குறைகளை நிவா்த்தி செய்யவும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. எனவே, காய்கனி, பழங்கள் தேவைப்படுவோா், 73056 11085 என்ற செல்லிடப்பேசி வழியாக கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com