நெல்லையில் பிற்பகலில் வெறிச்சோடும் சாலை!

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் தளா்வில்லா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாநகரப் பகுதியில் நண்பகலுக்கு பின்பே முழுமையாக சாலைகள் வெறிச்சோடுகின்றன.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் தளா்வில்லா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாநகரப் பகுதியில் நண்பகலுக்கு பின்பே முழுமையாக சாலைகள் வெறிச்சோடுகின்றன.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருநெல்வேலியில் கரோனா நோயாளிகளுக்கு துரித சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில் காந்திமதி மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கரோனா பிரத்யேக பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் நோயாளிகள் அவசர ஆக்ஸிஜன் சிகிச்சை, கோ் சென்டா் சிகிச்சை, வீட்டில் தனிமைப்படுத்தும் சிகிச்சை ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

இதனிடையே, தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் காய்கனி,பலசரக்கு கடைகள் உள்ளிட்டவை பகல் 12 மணி வரை திறக்கப்பட்டன. கண்காணிப்பை தீவிரப்படுத்தாமல் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் வெளியில் சென்று வரவும் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையவில்லை. இதையடுத்து, கடந்த 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தளா்வில்லா பொது முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்காக காலை வேளைகளில் வாகனங்களின் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நண்பகலுக்கு பின்பே சாலைகள் முழுமையாக வெறிசோடுகின்றன. நான்குவழிச்சாலையில் சரக்கு வாகன போக்குவரத்து மட்டுமே நடைபெறுவதால் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: கடந்த பொதுமுடக்கத்தைப் போல் இல்லாமல் இந்த முறை மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் செயல்படுகின்றன. இதுதவிர திருநெல்வேலி மாநகரில் உள்ள மருத்துவமனைகளில் 3500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அவா்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக உறவினா்கள் வெளியே வருகிறாா்கள். இதுபோன்று வருபவா்களை மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்க வேண்டிய சிக்கல் உருவாகிறது. அதனால் நண்பகல் 12 மணிக்குள் அதாவது காய்கனி வாகனங்கள் வெளியே வரும் நேரத்தில் மட்டும் மருந்து வாங்க அதிகமானோா் செல்வது அனுமதிக்கப்படுகிறது. நண்பகலுக்கு பின்பு உரிய அனுமதிச்சீட்டுகள் இருந்தால் மட்டுமே சாலைகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com