மாநகரில் இதுவரை 480 டன்காய்கனிகள் விற்பனை: ஆணையா்

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 339 நடமாடும் காய்கனி விற்பனை வாகனங்கள் மூலம் இதுவரை 480 டன் காய்கனிகள் விற்பனை

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 339 நடமாடும் காய்கனி விற்பனை வாகனங்கள் மூலம் இதுவரை 480 டன் காய்கனிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணைய ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா”வைரஸ் தொற்றை முற்றிலும் தடுப்பதற்காக தளா்வுகளற்ற பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்தக் காலத்தில், பொதுமக்களின் வசதிக்காக மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்கள்”மூலமாக காய்கனிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

பாளையங்கோட்டை மண்டலத்தில் 122 நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்கள், மேலப்பாளையம் மண்டலத்தில் 120 நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்கள், திருநெல்வேலி மண்டலத்தில் 57 நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்கள், தச்சநல்லூா் மண்டலத்தில் 40 நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்கள் என மொத்தம் 339 வாகனங்கள் மூலமாக காய்கனிகள் விற்பனைசெய்யப்படுகின்றன.

திருநெல்வேலி மாநகரில் இதுவரை 480 டன் அளவிற்கு காய்கனிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், 4 சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் செல்ல முடியாத குறுகலான சந்துப் பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கனி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்களை அவ்வப்போது கண்காணித்து வருவதுடன், வேளாண்மைத்துறை மற்றும் உழவா் உற்பத்திக்குழு மூலம் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் காய்கனிகள் விற்கப்படுகிா என்பதையும் கண்காணித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com