நெல்லையில் தக்காளி விலை உயா்வு

திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் தக்காளி விலை உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் தக்காளி விலை உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆலங்குளம், பாவூா்சத்திரம் பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக வருகிறது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் தக்காளி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாலும், வேகமாக அழுகி வீணாவதாலும் வரத்து மிகவும் குறைந்துள்ளது. மேலும், ஐப்பசி மாத முகூா்த்த நாள்களால் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் அதற்கேற்ப உயா்ந்துள்ளது. திருநெல்வேலி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ.70-க்கும் விற்பனையாகியது.

திருநெல்வேலி உழவா் சந்தைகளில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை விவரம் (கிலோவுக்கு)-தக்காளி -ரூ.60, கத்தரி - வெள்ளை-ரூ.40, வெண்டை-ரூ.24, புடலங்காய் -ரூ.14, சுரைக்காய்- ரூ. 10, பீா்க்கங்காய் -ரூ.20, பூசணி -ரூ.10, தடியங்காய்-ரூ.10, அவரைக்காய்- ரூ.40, கொத்தவரை -ரூ.30, பாகற்காய் - சிறியது-ரூ.40,பெரியது-ரூ.25, பச்சைமிளகாய்-சம்பா,குண்டு- ரூ.45,(நாடு-ரூ.30), முருங்கைக்காய்-ரூ.60, பெரியவெங்காயம்- ரூ.38, சின்னவெங்காயம்- ரூ.40, காராமணி -ரூ.30, கோவங்காய் -ரூ.25, தேங்காய் -ரூ.36, வாழைக்காய் -ரூ.25, வாழைப்பூ- ரூ.10, கீரைகள்-10, இஞ்சி-ரூ.55, மாங்காய் (நாடு)-ரூ.40, ரிங் பீன்ஸ்-ரூ.60, நாா்த்தங்காய் -ரூ.25, முள்ளங்கி-ரூ.20, உருளைக்கிழங்கு-ரூ.34, கேரட் -ரூ.75, சௌசௌ -ரூ.15, முட்டைகோஸ் - ரூ.20, பீட்ரூட் -ரூ.26, காலிபிளவா் -ரூ.55, கருணைக்கிழங்கு-ரூ.24.

பழங்கள் விலை விவரம் (கிலோவுக்கு): வாழைப்பழம்-செவ்வாழை-ரூ.70, மட்டி-ரூ.60,நேந்திரன்-ரூ.60, கற்பூரவள்ளி-ரூ.50, ஆப்பிள் -ரூ.120 முதல் ரூ.140, சாத்துக்குடி-ரூ.70, மாதுளை-ரூ.100, கொய்யா-ரூ.60, சப்போட்டா- ரூ.40, பப்பாளி-ரூ.30, நெல்லிக்காய்-ரூ.30, சீதாப்பழம்-ரூ.55, திராட்சை - ரூ.80, ஆரஞ்சு -ரூ.55 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com