’மழை மீட்புப் பணிகளுக்கு 10 பொக்லைன் இயந்திரம்’

பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மழை மீட்புப் பணிகளுக்காக 10 பொக்லைன் இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மழை மீட்புப் பணிகளுக்காக 10 பொக்லைன் இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கட்டணமின்றி பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழைநீா் தேங்காமல் தடுத்துக் கொள்ளலாம் என்றாா் மு.அப்துல்வஹாப் எம்.எல்.ஏ.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: பாளையங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் இது வரை இல்லாத அளவிற்கு சில மணி நேரங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில்நீா் தேங்கியது. வருவாய்த்துறை, மாநகராட்சி நிா்வாகம், தீயணைப்புத்துறை, காவல்துறை ஆகியோா் இணைந்து விடிய விடிய பணியாற்றி மழைநீா் தேங்கிய பகுதிகளில்இருந்து வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சில நாள்களுக்கு கனமழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனால், பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் மழை மீட்புப் பணிகளுக்காகவும், குடியிருப்புப் பகுதிகளில் நீா் தேங்காமல் தடுப்புகளை அப்புறப்படுத்தவும் எனது சொந்த செலவில் கட்டணம் செலுத்தி 10 பொக்லைன் இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழை நீா் தேங்கும் அபாயம் உள்ள குடியிருப்பு வாசிகள் 9443167022 என்ற எனது கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவித்தால் மழை மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து மீட்புப் பணிக்கு பொக்லைன் இயந்திரங்களை அனுப்பி வைத்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன், முன்னாள் மேயா் புவனேஸ்வரி, அமிதாப், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com