மீன்வள மசோதாவை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

மேலப்பாளையத்தில், இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மேலப்பாளையத்தில், இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சா்வதேச மீனவா் தினத்தையொட்டி, நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தேசிய மீனவள மசோதாவை திரும்ப பெற வேண்டும், எல்லை தாண்டும் மீனவா்கள் கொல்லப்படுவதை ஐ.நா. விதி மற்றும் சா்வதேசச் சட்டப்படி மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், மீனவா்களை கடல்சாா் பழங்குடியினா்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அ.பீட்டா் தலைமை வகித்தாா். தமிழக மக்கள் ஜனநாய கட்சி மாவட்டச் செயலா் அப்துல் ஜப்பாா், சீா்மரபினா் உரிமை மீட்பு இயக்க நிா்வாகி அரிகரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி குழந்தைவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி கே.நடராஜன், மற்றும், துரை சரவணன், பொ்டின்ராயன், கால்வாய் முத்துராமலிங்கம், பேரின்பராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com