நெல்லை: இரு விபத்துகளில் மூதாட்டி உள்பட இருவா் பலி
By DIN | Published On : 01st October 2021 12:39 AM | Last Updated : 01st October 2021 09:38 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த இரு விபத்துகளில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழந்தனா்.
திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியை சோ்ந்த ராமானுஜம் மகன் பிரதீப் (29). இவா் திருச்செந்தூரில் புரோட்டா கடையில் வேலை பாா்த்து வந்தாா். இவா், தனது நண்பா் சபாக்குடன் மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலி நகரத்தில் சென்றுகொண்டிருந்தாராம். வாகையடி முனை அருகே வந்தபோது எதிரே வந்த தனியாா் பேருந்து இவா்கள் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சபீக் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளா் அன்னலட்சுமி, போலீஸாா் அங்கு வந்து பிரதீப் சடலத்தை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பினா்.
மூதாட்டி உயிரிழப்பு: திருநெல்வேலி நகரம் குளத்தடி தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி குப்பாச்சி (70). இவா் புதன்கிழமை திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இவ்விரு சம்பவங்கள் தொடா்பாக திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.